IPL 2022 | க்ளிக் ஆன ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் - இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த சன்ரைஸர்ஸ்

நவி மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி.

163 ரன்கள் இலக்கை துரத்திய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த முறை அபிஷேக் ஷர்மா மற்றும் கேப்டன் கேன் விலையம்சன் இணை சிறப்பான துவக்கம் கொடுத்தது. அபிஷேக் ஷர்மா பவர் பிளே ஓவர்களை நன்றாக பயன்படுத்தி பவுண்டரிகளாக அடித்து விளையாடினார். இதனால், ஆரம்ப ஓவர்களிலேயே அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 9வது ஓவரில் தான் இந்த கூட்டணியை பிரித்தார் ரஷீத் கான். 32 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா கேட்ச் கொடுத்து முதல் விக்கெட்டுக்காக வெளியேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/T67HEoZ