IPL 2022 | பொல்லார்டின் கடைசி நேர அதிரடி, சூர்யகுமார் ரிட்டன்ஸ் - கொல்கத்தா அணிக்கு 162 இலக்கு

மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 161 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 5 பந்துகள் மட்டுமே ஆடிய பொல்லார்டு 3 சிக்ஸ்ர்களை விளாசி அதிரடி காட்டினார்.

ஐபிஎல் ஆட்டத்தின் 14-வது லீக் போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன், ரோஹித் சர்மா இணை துவக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடி வந்த இந்த இணையை 3-வது ஓவர் வீசிய உமேஷ் யாதவ் பிரித்தார். அவர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 3 ரன்களில் நடையைக் கட்டினார் ரோஹித் சர்மா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ETKF8Au