இலங்கை நெருக்கடி | தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகல்

கொழும்பு: இலங்கை நாட்டின் தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் தங்களது பதவியிலிருந்து விலகி உள்ளனர். இந்த கவுன்சிலுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே தலைவராக செயல்பட்டு வந்தார்.

விளையாட்டுக் கொள்கை சார்ந்த விவகாரங்களில் நாட்டின் விளையாட்டு துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கடந்த 2020 ஆகஸ்ட்டில் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது. முன்னதாக இலங்கை நாட்டின் தற்போதைய சிக்கலுக்கு யார் காரணம். இதனை எப்படி சரி செய்வது என்பது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை சொல்லி இருந்தார் ஜெயவர்த்தனே. இந்நிலையில் ஜெயவர்த்தனே உட்பட உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/mdNuBiT