அஷ்வின் ‘நம்பர்–2’: டெஸ்ட் ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் | டிசம்பர் 08, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடெஸ்ட் ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் ‘நம்பர்–2’ இடத்துக்கு முன்னேறினார். டெஸ்ட் தரவரிசையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டுள்ளது. இதில் ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் தமிழகத்தின் அஷ்வின், 360 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (346), இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (348 புள்ளி), மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் விண்டீசின் ஜேசன் ஹோல்டர் (382) தொடர்கிறார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638980909/ICCTestCricketRankingAshwinAllRounder.html