ஜடேஜா ‘நம்பர்–2’: ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில் | டிசம்பர் 01, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., டெஸ்ட் ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா ‘நம்பர்–2’ இடத்துக்கு முன்னேறினார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டுள்ளது. இதில் ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 353 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த இவர், இரு இன்னிங்சிலும் சேர்த்து 5 விக்கெட் சாய்த்தார். மற்றொரு இந்திய ‘சுழல்’ வீரர் அஷ்வின், 352 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638375831/ICCTestCricketRankingRavindraJadejaViratKohliRohitSharma.html