http://ifttt.com/images/no_image_card.pngபிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலிய பவுலர்கள் அசத்த முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 147 ரன்னுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மிட்சல் ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் ரோரி பர்ன்ஸ் (0) போல்டானார். ஹேசல்வுட் ‘வேகத்தில்’ டேவிட் மலான் (6), ஜோ ரூட் (0) வெளியேறினர். பாட் கம்மின்ஸ் பந்தில் பென் ஸ்டோக்ஸ் (5) அவுட்டானார். இங்கிலாந்து அணி 29 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638981302/AustraliaEnglandAshesTestCricketBrisbaneCummins.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638981302/AustraliaEnglandAshesTestCricketBrisbaneCummins.html