http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2–0 என தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது. வங்கதேசம் சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் தாகாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 300 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. நான்காம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கு 76 ரன் எடுத்திருந்தது. சாகிப் (23) அவுட்டாகாமல் இருந்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638981528/PakistanBangladeshSecondTestCricketSajidKhan.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638981528/PakistanBangladeshSecondTestCricketSajidKhan.html