இந்திய அணி அறிவிப்பு எப்போது: தென் ஆப்ரிக்க தொடருக்கு | டிசம்பர் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதென் ஆப்ரிக்க தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு ‘டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. இதற்காக வரும் டிச. 9ல் இந்திய அணியினர் தென் ஆப்ரிக்கா புறப்பட இருந்தனர். ஆனால் தென் ஆப்ரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் திடீரென பரவி வரும் ‘ஒமைக்ரான்’ என்ற புது வகை கொரோனா காரணமாக உலகம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்திய அணியின் தென் ஆப்ரிக்க பயணம் ஒரு வார காலத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் நடத்தப்படும். ஆனால் நான்கு போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638723982/IndiaSquadSouthAfricaCricketTourIshantSharma.html