கங்குலி அணி ஏமாற்றம்: ஒரு ரன்னில் தோல்வி | டிசம்பர் 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபி.சி.சி.ஐ., பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான கண்காட்சி கிரிக்கெட் போட்டியில், ஜெய் ஷா தலைமையிலான செக்ரெட்டரி லெவன் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. கோல்கட்டாவில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதற்காக கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. தலா 15 ஓவர் கொண்ட இப்போட்டியில் பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி தலைமையிலான பிரசிடென்ட் லெவன் அணி, பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா வழிநடத்திய செகரெட்டரி லெவன் அணியை எதிர்கொண்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638633906/BCCIAGMFestivalMatchSouravGangulyJayShahBCCIPresidents.html