தென் ஆப்ரிக்க தொடரில் மாற்றம்: பி.சி.சி.ஐ., அறிவிப்பு | டிசம்பர் 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணியின் தென் ஆப்ரிக்க பயணம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘டி–20’ தொடர் பின்னர் நடத்தப்படும் என்று பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு ‘டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. இதற்காக வரும் டிச. 9ல் இந்திய அணியினர் தென் ஆப்ரிக்கா புறப்பட இருந்தனர். ஆனால் தென் ஆப்ரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் திடீரென பரவி வரும் ‘ஒமைக்ரான்’ என்ற புது வகை கொரோனா காரணமாக உலகம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இத்தொடர் நடக்குமா என சந்தேகம் எழுந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638633457/IndiaSouthAfricaCricketSeriesCovid19PostponedT20Series.html