http://ifttt.com/images/no_image_card.pngதென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா ‘ஏ’ அணியின் ஹனுமா விஹாரி, சர்பராஸ் கான் அரைசதம் கடந்தனர். தென் ஆப்ரிக்காக சென்றுள்ள இந்திய ‘ஏ’ அணி மூன்று, நான்கு நாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் புளோம்போன்டினில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி 297 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட்டுக்கு 198 ரன் எடுத்திருந்தது. விஹாரி (45), சர்பராஸ் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638466011/IndiaASouthAfricaASecondTestCricketVihariSarfaraz.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638466011/IndiaASouthAfricaASecondTestCricketVihariSarfaraz.html