இலங்கை வலுவான முன்னிலை: தனஞ்செயா டி சில்வா சதம் | டிசம்பர் 02, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் தனஞ்செயா டி சில்வா சதம் விளாச இலங்கை அணி வலுவான முன்னிலை பெற்றது. இலங்கை சென்றுள்ள விண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 204, விண்டீஸ் 253 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 46 ரன் எடுத்திருந்தது. நிசங்கா (21), அசலங்கா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638461945/SriLankaWindiesSecondTestCricketDhananjayadeSilva.html