http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., ‘டி–20’ தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார். லோகேஷ் ராகுல் 5வது இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச ‘டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி, 698 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆப்கானிஸ்தான் (69), ஸ்காட்லாந்து (50), நமீபியாவுக்கு (54) எதிரான ‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டிகளில் அரைசதமடித்த இந்திய துவக்க வீரர் லோகேஷ் ராகுல், 727 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636561660/ICCT20PlayersRankingViratKohliKLRahulBumrah.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636561660/ICCT20PlayersRankingViratKohliKLRahulBumrah.html