லோகேஷ் ராகுல் ‘நம்பர்–6’: ‘டி–20’ தரவரிசையில் பின்னடைவு | நவம்பர் 17, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., ‘டி–20’ தரவரிசையில் இந்தியாவின் லோகேஷ் ராகுல், 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சர்வதேச ‘டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் லோகேஷ் ராகுல், 727 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோஹ்லி, 698 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நீடிக்கிறார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637164326/ICCT20PlayersRankingCricketKLRahulViratKohli.html