http://ifttt.com/images/no_image_card.pngமூன்றாவது ‘டி–20’ போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாச, இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடரை 3–0 என கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் இரு சவாலில் வென்ற இந்திய அணி, தொடரை 2–0 என கைப்பற்றியது. முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் ராகுல், அஷ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இஷான் கிஷான், சகால் வாய்ப்பு பெற்றனர். நியூசிலாந்து அணியில் கேப்டன் சவுத்தீக்கு(ஓய்வு) பதில் பெர்குசன் இடம் பெற்றார். தற்காலிக கேப்டன் பொறுப்பை சான்ட்னர் ஏற்றார். ‘ஹாட்ரிக்’ டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா சற்றும் தயங்காமல் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637518763/IndiaNewZealandT20SeriesCricketRohitSharma.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637518763/IndiaNewZealandT20SeriesCricketRohitSharma.html