‘மஞ்சள் தமிழர்’ தோனி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம் | நவம்பர் 20, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதமிழக ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக தோனி உள்ளார். தமிழர்கள் பச்சை தமிழர் என்றால், தோனி, மஞ்சள் தமிழர்,’’ என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஐ.பி.எல்., கோப்பையை வென்ற சென்னை கிங்ஸ் அணிக்கு நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடந்தது. இதில் சென்னை கிங்ஸ் அணி வீரர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்நிகழ்ச்சிக்கு முதல்வராக என்னை அழைத்திருந்தாலும், நான் தோனியின் ரசிகராக வந்துள்ளேன். என் பேரக் குழந்தைகளும் தோனியின் ரசிகர்கள்; அவர்களும் வந்துள்ளனர். என் தந்தை கருணாநிதியும் அவரது ரசிகர். சென்னை என்றாலே சூப்பர்தான். இது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு இருந்தாலும், கடந்த பத்து நாட்களாக பெய்த மழை, மீட்பு பணிகள் குறித்த நினைவுதான் உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637428840/IPL2021ChennaiSuperKingsChampionVictoryCelebrationTamilNadu.html