சாகிப் அல் ஹசன் விலகல்: ‘டி–20’ தொடரில் இருந்து | நவம்பர் 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தானுக்கு எதிரான ‘டி–20’ தொடரில் இருந்து காயம் காரணமாக வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் விலகினார். வங்கதேசம் வரவுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று ‘டி–20’ (நவ. 19, 20, 22), இரண்டு டெஸ்ட் (நவ. 26–30, டிச. 4–8) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வங்கதேச ‘ஆல்–ரவுண்டர்’ சாகிப் அல் ஹசன் 34, தொடையின்பின்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் ‘டி–20’ தொடரில் விளையாடமாட்டார். சமீபத்தில் விண்டீசுக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டியின் போது காயம் ஏற்பட்டதால் இவர், இத்தொடரில் இருந்து பாதியில் விலகினார். இவர், டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636204667/PakistanT20CricketSeriesShakibAlHasanBangladesh.html