ரோகித், பும்ரா முன்னேற்றம்: ஐ.சி.சி., ‘டி–20’ தரவரிசையில் | நவம்பர் 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., சர்வதேச ‘டி–20’ வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, பும்ரா முன்னேற்றம் கண்டனர். சர்வதேச ‘டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டுள்ளது. இதில் ‘பேட்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, 567 புள்ளிகளுடன் 24வது இடத்தில் இருந்து 23வது இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான கேப்டன் விராத் கோஹ்லி (714 புள்ளி, 5வது இடம்), லோகேஷ் ராகுல் (678 புள்ளி, 8வது இடம்) ‘டாப்–10’ பட்டியலில் நீடிக்கின்றனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635941700/ICCT20PlayersRankingCricketRohitSharmaBumrahBabarAzam.html