தொடரை வென்றது இந்தியா: ரோகித், ராகுல் விளாசல் | நவம்பர் 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇரண்டாவது ‘டி–20’ போட்டியில்கேப்டன் ரோகித், ராகுல் அரைசதம் விளாச,இந்தியஅணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2–0 என வென்றது. நியூசிலாந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்தது. இந்திய அணியில் முகமது சிராஜுக்கு(இடது கையில் காயம்) பதில் ஹர்ஷல் படேல் அறிமுக வாய்ப்பு பெற்றார். நியூசிலாந்து அணியில் பெர்குசன், ரச்சின் ரவிந்திரா, டாட் ஆஸ்லேக்கு மாற்றாக ஆடம் மில்னே, இஷ் சோதி, நீஷம் இடம் பெற்றனர். ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637343108/IndiaNewZealandSecondT20CricketHarshalPatelKLRahul.html