http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேசத்துக்கு எதிரான முதல் ‘டி–20’ போட்டியில் அசத்திய பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி தாகாவில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த வங்கதேச அணிக்கு முகமது நைம் (1), சைப் ஹசன் (1), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (7), கேப்டன் மகமதுல்லா (6) ஏமாற்றினர். ஆபிப் ஹொசைன் (36), நுாருல் ஹசன் (28), மெகதி ஹசன் (30*) ஆறுதல் தர, வங்கதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 2 விக்கெட் வீழ்த்தினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637333897/BangladeshPakistanFirstT20CricketHasanAli.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637333897/BangladeshPakistanFirstT20CricketHasanAli.html