http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டிம் பெய்ன் விலகினார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் டிச. 8ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக டிம் பெய்ன் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் இவர், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இருப்பினும் அணியில் வீரராக தொடர்வதாக தெரிவித்துள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637333659/TimPaineAustraliaCricketCaptainResigns.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637333659/TimPaineAustraliaCricketCaptainResigns.html