டிவிலியர்ஸ் ‘குட்–பை’: கிரிக்கெட்டில் இருந்து... | நவம்பர் 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டிவிலியர்ஸ், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டிவிலியர்ஸ் 37. விக்கெட் கீப்பர் பேட்டரான இவர், 114 டெஸ்ட் (8765 ரன்), 228 ஒருநாள் (9577), 78 சர்வதேச ‘டி–20’ (1672) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2018ல் (மே) சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்த இவர், உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த ‘பிக் பாஷ் லீக்’, ஐ.பி.எல்., உள்ளிட்ட ‘டி–20’ லீக் தொடர்களில் மட்டும் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637333486/ABdeVilliersSouthAfricaCricketRetirement.html