சவுரவ் கங்குலிக்கு ஐ.சி.சி., பதவி: கிரிக்கெட் கமிட்டி தலைவராக நியமனம் | நவம்பர் 17, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., ஆண்கள் கிரிக்கெட் கமிட்டி தலைவராக, பி.சி.சி.ஐ., தலைவர் சவுரங் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை ஐ.சி.சி., கிரிக்கெட் கமிட்டி தீர்மானித்து வருகிறது. இதன் ஆண்களுக்கான கிரிக்கெட் கமிட்டி தலைவராக, இந்திய முன்னாள் ‘சுழல்’ ஜாம்பவான் அனில் கும்ளே, 2012ல் (அக். 12) நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2019ல் (மார்ச் 2) நிறைவடைந்தது. இந்நிலையில் இப்பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவருமான சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637164976/ICCmensCricketCommitteeChairmanSouravGangulyBCCIPresident.html