டேரில் மிட்சல் தேர்வு | நவம்பர் 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு நியூசிலாந்தின் டேரில் மிட்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணி, மூன்று ‘டி–20’ (நவ. 17, 19, 21), இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ. 25–29ல் கான்பூரில் நடக்கவுள்ளது. இரண்டாவது டெஸ்ட், வரும் டிச. 3ல் மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இத்தொடர்களுக்கான நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த ‘விக்கெட் கீப்பர் பேட்டர்’ கான்வே, வலது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக விலகினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636908081/IndiaNewZealandTestCricketDevonConwayDarylMitchell.html