மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் வீரர் | நவம்பர் 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக கோப்பை அரையிறுதியில் ‘கேட்ச்சை’ நழுவவிட்ட பாகிஸ்தானின் ஹசன் அலி மன்னிப்பு கேட்டார். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி 27. இவர், சமீபத்தில் துபாயில் நடந்த ‘டி–20’ உலக கோப்பை அரையிறுதியில் ஷஹீன் அப்ரிதி வீசிய 19வது ஓவரில் ஆஸ்திரேலியாவின் மாத்யூ வேட் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை நழுவவிட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட வேட், அடுத்த 3 பந்துகளை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இதனால் கோப்பை கனவு பறிபோனதால் ஹசன் அலியை பாகிஸ்தான் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636908781/HasanAliPakistanCricketApologisesDropCatch.html