http://ifttt.com/images/no_image_card.pngகிறிஸ் கெய்ர்ன்ஸ் விரைவாக தேறி வருகிறார். ‘ஜிம்’ சென்று சிறிய பயிற்சிகள் செய்கிறார். நியூசிலாந்து அணியின் முன்னாள் ‘ஆல்–ரவுண்டர்’ கிறிஸ் கெய்ர்ன்ஸ், 51. கடந்த 1989–2006 வரை விளையாடினார். 62 டெஸ்ட்(3320 ரன், 281 விக்.,), 215 ஒருநாள் போட்டி(4950 ரன், 201 விக்.,), 2 ‘டி–20’(3 ரன், 1 விக்.,) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் இவரது இருதயத்தில் பிரச்னை ஏற்பட சிட்னியில் உள்ள மருத்துவமனையில் நான்கு முறை ‘ஆப்பரேஷன்’ செய்யப்பட்டது. பின் முதுகுதண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட, இடுப்புக்கு கீழே செயல் இழந்து போனது. இரு கால்களையும் அசைக்க முடியவில்லை. இதன் காரணமாக படுக்கையில் முடங்கினார். மூன்று மாதங்களுக்கு பிறகு வீல் சேருக்கு மாற்றப்பட்டார். தற்போது ‘ஜிம்’ சென்று சிறிய பயிற்சிகள் செய்கிறார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636907063/ChrisCairnsNewZealandCricketWheelchair.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636907063/ChrisCairnsNewZealandCricketWheelchair.html