http://ifttt.com/images/no_image_card.pngமூன்று வித போட்டிகளிலும் ருதுராஜ் சாதிப்பார்,’’ என, கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 24. இதுவரை 2 சர்வதேச ‘டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் முடிந்த 14வது ஐ.பி.எல்., சீசனில் சென்னை அணிக்காக 16 போட்டியில், ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 635 ரன் குவித்த இவர், அதிக ரன் எடுத்தவருக்கான ‘ஆரஞ்சு’ நிற தொப்பியை தட்டிச் சென்றார். இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் (நவ. 17, 19, 21) கொண்ட ‘டி–20’ தொடருக்கு தேர்வானார். இதேபோல ஐ.பி.எல்., தொடரில் அசத்திய வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், அவேஷ் கான் ஆகியோரும் முதன்முறையாக இந்திய அணிக்கு தேர்வாகினர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636818006/RuturajGaikwadIndiaNewZealandT20CricketSeriesSunilGavaskar.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636818006/RuturajGaikwadIndiaNewZealandT20CricketSeriesSunilGavaskar.html