http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீஸ் அணியின் (19 வயது) ‘பேட்டிங்’ ஆலோசகராக சந்தர்பால் நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீசில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரின் 14வது சீசன் அடுத்த ஆண்டு (ஜன. 4 – பிப். 3) நடக்கவுள்ளது. இந்நிலையில் 19 வயதுக்குட்பட்ட விண்டீஸ் அணியின் ‘பேட்டிங்’ ஆலோசகராக முன்னாளர் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால் 47, நியமிக்கப்பட்டுள்ளார். இடதுகை பேட்ஸ்மேனான இவர், இதுவரை 164 டெஸ்ட் (11867 ரன்), 268 ஒருநாள் (8778), 22 சர்வதேச ‘டி–20’ (343) போட்டிகளில் 20988 ரன் குவித்துள்ளார். இவர், வரும் நவ. 15–28ல் ஆன்டிகுவாவில் நடக்கவுள்ள உலக கோப்பை (19 வயது) தொடருக்கான பயிற்சி முகாமில் அணியில் இணைய உள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636817673/WestIndiesU19CricketBattingConsultantShivnarineChanderpaul.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636817673/WestIndiesU19CricketBattingConsultantShivnarineChanderpaul.html