இந்தியா–பாகிஸ்தான் மோதல் எப்போது: காமன்வெல்த் விளையாட்டில் | நவம்பர் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகாமன்வெல்த் விளையாட்டில் இந்தியா–பாகிஸ்தான் பெண்கள் அணிகள் மோதும் ‘டி–20’ போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 31ல் நடக்கவுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காமில், அடுத்த ஆண்டு (ஜூலை 28 – ஆக. 8) காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கவுள்ளது. இதில் பெண்களுக்கான ‘டி–20’ கிரிக்கெட் போட்டி முதன்முறையாக நடத்தப்படுகிறது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (2022, ஜூலை 6) தகுதி பெறும். பைனல், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிகள் ஜூலை 7ல் நடக்கவுள்ளன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636733573/CommonwealthGames2022WomenCricketIndiaPakistan.html