ரோகித் சர்மாவுக்கு ‘ரெஸ்ட்’: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு | நவம்பர் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்தியாவின் ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட், முகமது ஷமி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணி, மூன்று ‘டி–20’ (நவ. 17, 19, 21), இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ. 25–29ல் கான்பூரில் நடக்கவுள்ளது. இரண்டாவது டெஸ்ட், வரும் டிச. 3ல் மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் ‘ரெகுலர்’ கேப்டன் விராத் கோஹ்லி பங்கேற்கமாட்டார். இவருக்கு பதிலாக துணை கேப்டன் ரகானே, அணியை வழிநடத்த உள்ளார். துணை கேப்டனாக புஜாரா நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக கோஹ்லி செயல்படுவார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636733155/NewZealandTestSeriesIndiaSquadRohitSharmaRishabhPant.html