ரகானே புதிய கேப்டன்: முதல் டெஸ்ட் போட்டிக்கு | நவம்பர் 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணி, மூன்று ‘டி–20’ (நவ. 17, 19, 21), இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ. 25–29ல் கான்பூரில் நடக்கவுள்ளது. இரண்டாவது டெஸ்ட், வரும் டிச. 3ல் மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. முதல் டெஸ்டில் இருந்து இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி விலகினார். இவர், 2வது டெஸ்டில் விளையாடுவார். இதனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக, துவக்க வீரர் ரோகித் சர்மா அல்லது துணை கேப்டன் ரகானே நியமிக்கப்பட வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, முதல் டெஸ்டில் ரகானே கேப்டனாக செயல்படுவார் என, தகவல் வெளியாகி உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636650532/IndiaNewZealandTestSeiresRahaneCaptainRohitSharmaRested.html