தென் ஆப்ரிக்க வீரர் அசத்தல்: 10 விக்கெட் கைப்பற்றினார் | நவம்பர் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதென் ஆப்ரிக்காவின் சாம் ஒயிட்ஹெட், ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றினார். தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ‘டிவிசன்–2’ முதல் தர போட்டியில் சவுத் வெஸ்டர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி (242/10, 193/10), 120 ரன் வித்தியாசத்தில் ஈஸ்டர்ன் ஸ்டிரோம் (250/10, 65/10) அணியை வீழ்த்தியது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சவுத் வெஸ்டர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணிக்காக விளையாடிய சுழற்பந்துவீச்சு ‘ஆல்–ரவுண்டர்’ சாம் ஒயிட்ஹெட், ஈஸ்டர்ன் ஸ்டிரோம் அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இவர், 12.1 ஓவரில் 4 ‘மெய்டன்’ உட்பட 36 ரன் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய இவர், ‘பேட்டிங்கில்’ 66, 49 ரன் எடுத்து கைகொடுத்தார். இவர், 2016ல் வங்கதேசத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்க அணிக்காக விளையாடினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637517535/SamWhiteheadSouthAfricaDomesticFirstClassCricket10Wickets.html