தமிழக அணி அதிர்ச்சி தோல்வி: சையது முஷ்தாக் அலி டிராபியில்... | நவம்பர் 08, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் தோல்வியை பெற்றது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி 13வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. லக்னோவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ தமிழகம், கோவா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோவா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. தமிழக அணிக்கு ஹரி நிஷாந்த் (10), ஷாய் கிஷோர் (7) ஏமாற்றினர். மற்றொரு துவக்க வீரர் நாராயண் ஜெகதீசன் (21) ஆறுதல் தந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் (10), கேப்டன் விஜய் சங்கர் (4) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய சஞ்சய் யாதவ் (38), ஷாருக்கான் (26) ஓரளவு கைகொடுத்தனர். முகமது (0), சரவண குமார் (11) சோபிக்கவில்லை.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636390928/SyedMushtaqAliT20TrophyCricketTamilNaduGoa.html