‘டாஸ்’ தொல்லை... ‘பிரேக்’ இல்லை: பவுலிங் பயிற்சியாளர் விளக்கம் | நவம்பர் 07, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமுக்கிய போட்டிகளில் ‘டாஸ்’ வெல்லாதது, ஓய்வில்லாமல் 6 மாத காலம் விளையாடியது, பாதுகாப்பு வளையம் தந்த சோர்வு காரணமாக இந்திய அணியால் உலக கோப்பை தொடரில் சோபிக்க முடியவில்லை,’’ என பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்தார். எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இவ்விரு போட்டிகளிலும் ‘டாஸ்’ வெல்லாதது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரை நடந்த 40 போட்டிகளில்(நியூசி–ஆப்கன் வரை) 25ல் ‘சேஸ்’ செய்த அணிகள் வென்றன. 28ல் ‘டாஸ்’ வென்ற அணிகள் முதலில் ‘பவுலிங்’ தேர்வு செய்தன. இதில் 19ல் வெற்றி பெற்றன. இந்திய அணியை பொறுத்தவரை பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் ‘டாசில்’ தோற்றது. இரு போட்டிகளிலும் ‘சேஸ்’ செய்யும் வாய்ப்பு கிடைக்காததால், தோல்வியை தழுவியது. ஸ்காட்லாந்துக்கு எதிராக ‘டாஸ்’ வென்ற இந்தியா, 6.3 ஓவரில் 89 ரன்களை ‘சேஸ்’ செய்து வென்றது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636304119/ICCT20WorldCupT20CricketIndiaBharatArunBowling.html