ஹர்மன்பிரீத், ஜெமிமா அசத்தல்: மெல்போர்ன் அணி வெற்றி | நவம்பர் 07, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான ‘பிக் பாஷ் லீக்’ போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் அசத்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ‘பிக் பாஷ் லீக்’ 7வது சீசன் நடக்கிறது. அடிலெய்டில் நடந்த லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு கிம் கார்த் (32), எரின் ஆஸ்போர்ன் (29) ஆறுதல் தர, 20 ஓவரில் 103 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ரெனிகேட்ஸ் அணி சார்பில் ‘சுழலில்’ அசத்திய ஹர்மன்பிரீத் கவுர், 3 விக்கெட் கைப்பற்றினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636301877/WomensBigBashLeagueAustraliaHarmanpreetKaurJemimahRodriguesMelbourne.html