http://ifttt.com/images/no_image_card.pngசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விண்டீசின் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். விண்டீஸ் ‘ஆல்–ரவுண்டர்’ டுவைன் பிராவோ 38. கடந்த 2004ல் சர்வதேச அரங்கில் காலடி வைத்த இவர், இதுவரை 40 டெஸ்ட் (2200 ரன், 86 விக்கெட்), 164 ஒருநாள் (2968 ரன், 199 விக்கெட்), 90 சர்வதேச ‘டி–20’ (1245 ரன், 78 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2015ல் டெஸ்டில் இருந்து விடைபெற்ற பிராவோ, 2018 அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். பின், 2019 டிசம்பரில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636128186/DwayneBravoWindiesCricketRetirement.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636128186/DwayneBravoWindiesCricketRetirement.html