http://ifttt.com/images/no_image_card.pngஒடிசா அணிக்கு எதிரான சையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில் தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி 13வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. லக்னோவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ தமிழகம், ஒடிசா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஒடிசா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. தமிழக அணிக்கு கேப்டன் நாராயண் ஜெகதீசன் (37), சாய் சுதர்சன் (28) கைகொடுத்தனர். பாபா அபராஜித் 28 பந்தில் 44* ரன் (2 சிக்சர், 3 பவுண்டரி), முகமது 12 பந்தில் 27* ரன் (2 சிக்சர், ஒரு பவுண்டரி) விளாசினர். தமிழக அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636128646/SyedMushtaqAliTrophyT20CricketTamilNaduOdishaNatarajan.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636128646/SyedMushtaqAliTrophyT20CricketTamilNaduOdishaNatarajan.html