http://ifttt.com/images/no_image_card.pngமகாராஷ்டிரா அணிக்கு எதிரான சையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில் தமிழக அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி 13வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள், 6 பிரிவுகளாக விளையாடுகின்றன. லக்னோவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், மகாராஷ்டிரா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மகாராஷ்டிரா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. தமிழக அணிக்கு ஹரி நிஷாந்த் (27), நாராயண் ஜெகதீசன் (30) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சாய் சுதர்சன் (35), கேப்டன் விஜய் சங்கர் (42*) கைகொடுத்தனர். ஷாருக்கான் (16) நிலைக்கவில்லை. தமிழக அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 167 ரன் குவித்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636028697/SyedMushtaqAliTrophyT20CricketTamilNaduMaharashtraRuturaj.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636028697/SyedMushtaqAliTrophyT20CricketTamilNaduMaharashtraRuturaj.html