வரலாறு திருத்தப்படும்; இந்தியாவுக்கு எதிரான கடந்த காலத்தை விட்டுத் தள்ளுங்கள்: பாக். கேப்டன் பாபர் ஆஸம் நம்பிக்கை

இந்தியாவுக்கு எதிராகக் கடந்த கால உலகக் கோப்பைகளில் ஏற்பட்ட தோல்விகளை விட்டுத் தள்ளுங்கள், நாளை நடக்கும் ஆட்டத்தைப் பாருங்கள், வரலாறுகள், சாதனைகள் உடைக்கப்படும் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் நம்பிக்கை தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி. கடந்த 2007-ம் ஆண்டு டி20 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அது முதல் இதுவரை டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றதாக வரலாறு இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3jpqHOf