சன்ரைசர்ஸ் கேப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன்? கடைசிவரை விளக்கம் கூறவில்லை: கொட்டித் தீர்த்த டேவிட் வார்னர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்ற கேள்விக்கு இதுவரை விளக்கமும் இல்லை, காரணமும் தெரிவிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அடுத்த ஆண்டு சீசனிலும் தொடர்வதற்கு டேவிட் வார்னர் விருப்பமாக இருந்தாலும், அது நடக்குமா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இந்த சீசனில் கடைசி 5 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன், முன்னாள் கேப்டனான வார்னரை பெஞ்ச்சில் அமரவைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3BJkST2