எப்போதும் ராஜா: 5-0 ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி: வரலாற்றை திருத்தப் போராடும் பாகிஸ்தான்: ஓர் பார்வை

டி20 உலகக் கோப்பையில் திருத்தி எழுதப்படாத வரலாறு உண்டு என்றால், அது இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்ற செய்தி மட்டும்தான். மற்ற அனைத்து சாதனைகளும் கால ஓட்டத்தில் முறியடிக்கப்பட்டாலும் இந்த ஒரு சாதனையை மட்டும் பாகிஸ்தான் அணியால் தகர்க்கவே முடியவில்லை.
டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும், 50ஓவர்கள் உலகக் கோப்பையாக இருந்தாலும் இதுநாள்வரை இந்தியா அணிதான் கிங்காக வலம் வருகிறது. வீராப்புடன் பேசுவது, தி்ட்டங்களை வகுப்பது, களத்தில் சீண்டுவது என பல ஜால்ஜாப்பு வேலைகளை பாகிஸ்தான் அணி ஒவ்வொரு போட்டியிலும் செய்தாலும் வெற்றி கடைசியில் இந்திய அணிக்குத் தான் கிடைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/30TURCR