நான்கு வீரர்களுக்கு ரூ. 42 கோடி: பி.சி.சி.ஐ., புதிய அறிவிப்பு | அக்டோபர் 30, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஅடுத்த ஐ.பி.எல்., சீசனுக்கு தக்கவைத்துக் கொள்ளப்படும் 4 வீரர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 42 கோடி செலவிடலாம்,’ என பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008 முதல் ஐ.பி.எல்., ‘டி–20’ தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான் என 8 அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் லக்னோ, ஆமதாபாத் இணைவதால், அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635611951/IPL2022T20CricketPlayersAuctionRetentionsSalaryCapBCCI.html