அபய் சர்மா விண்ணப்பம்: ‘பீல்டிங்’ பயிற்சியாளர் பதவிக்கு | அக்டோபர் 29, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணியின் ‘பீல்டிங்’ பயிற்சியாளர் பதவிக்கு அபய் சர்மா விண்ணப்பித்துள்ளார். எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பதவிக்காலம் நிறைவடைகிறது. இப்பதவிகளுக்கு விண்ணபிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் நவ. 3 கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635527109/AbhaySharmaIndiafieldingcoachJobCricket.html