துவக்கம் தர விருப்பம்: வாஷிங்டன் சுந்தர் ‘ரெடி’ | அக்டோபர் 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடெஸ்டில் துவக்க வீரராக களமிறங்க விரும்புகிறேன்,’’ என, வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக ‘ஆல்–ரவுண்டர்’ வாஷிங்டன் சுந்தர் 22. சமீபத்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்ற இவர், பயிற்சி போட்டியில் ஏற்பட்ட கைவிரல் காயம் காரணமாக தாயகம் திரும்பினார். இதனால் எமிரேட்சில் நடந்த 14வது ஐ.பி.எல்., மற்றும் ‘டி–20’ உலக கோப்பையில் பங்கேற்க முடியாமல் போனது. இதிலிருந்து தேறி வரும் இவர், சையது முஷ்டாக் அலி டிராபி ‘டி–20’ தொடருக்கான (வரும் நவ. 4–22) தமிழக அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். பின், தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.,) தலைவர் டிராவிட் ஆலோசனை படி இத்தொடரில் இருந்து விலகினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634917564/WashingtonSundarCricketIndiaTestOpener.html