http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணிக்கு தோனி வந்தது நல்ல விஷயம். இவரது ‘அட்வைஸ்’ வீரர்களுக்கு கைகொடுக்கும்,’’ என கவாஸ்கர் தெரிவித்தார். எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று முதல் ‘சூப்பர்–12’ சுற்று போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை பாகிஸ்தானை சந்திக்க உள்ளது. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் ‘ஜாம்பவான்’ கவாஸ்கர் கூறியது: இந்திய அணி ஆலோசகராக தோனி வந்தது நல்ல விஷயம் தான். ஆனால் இவரால் பெரியளவில் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் வேகமான ‘டுவென்டி–20’ போட்டிகளுக்கு ஏற்ப எப்படி தயாராக வேண்டும் என, அவரால் உதவ முடியும். சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை மாற்றிக் கொள்ள இந்த ‘அட்வைஸ்’ கைகொடுக்கும்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634908415/AlexandrovabeatsSabalenkatoreachKremlinCupsemifinals.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634908415/AlexandrovabeatsSabalenkatoreachKremlinCupsemifinals.html