http://ifttt.com/images/no_image_card.pngபணம் கொழிக்கும் ஐ.பி.எல்., மோகத்தில் இருக்கும் இந்திய வீரர்களுக்கு ‘டி–-20’ உலக கோப்பை தொடரில் அக்கறை இல்லை. ‘பேட்டிங்’ சுத்தமாக தெரியவில்லை. நேற்று நியூசிலாந்துக்கு எதிராகவும் சொதப்பிய இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த ‘சூப்பர்–12’ சுற்றுக்கான ‘குரூப்–2’ போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் டிம் செய்பெர்ட் நீக்கப்பட்டு ஆடம் மில்னே தேர்வானார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷான் கிஷான், ஷர்துல் தாகூர் இடம் பிடித்தனர். ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635702279/ICCT20WorldCupT20CricketNewZealandIndiaWillamson.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635702279/ICCT20WorldCupT20CricketNewZealandIndiaWillamson.html