http://ifttt.com/images/no_image_card.pngநெதர்லாந்துக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை முதல் சுற்று லீக் போட்டியில் அசத்திய இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. எமிரேட்ஸ், ஓமனில், ‘டி–20’ உலக கோப்பை நடக்கிறது. சார்ஜாவில் நடந்த முதல் சுற்றுக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ஏற்கனவே ‘சூப்பர்–12’ சுற்றை உறுதி செய்த இலங்கை அணி, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்த நெதர்லாந்தை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. நெதர்லாந்து அணிக்கு துவக்கத்தில் இருந்தே இலங்கை பவுலர்கள் தொல்லை தந்தனர். மேக்ஸ் ஓ'தவ்த் (2) ‘ரன்–அவுட்’ ஆனார். மகீஸ் தீக்சனா பந்தில் ஸ்டீபன் மைபர்க் (5), பென் கூப்பர் (10) போல்டாகினர். வணிந்து ஹசரங்கா ‘சுழலில்’ கோலின் ஆக்கர்மன் (11), பாஸ் டி லீடே (0), கேப்டன் பீட்டர் சீலார் (2) சிக்கினர். ரோலோப் வான் டெர் மெர்வி (0) ஏமாற்றினார். லகிரு குமாரா ‘வேகத்தில்’ ஸ்காட் எட்வர்ட்ஸ் (8), பிரண்டன் கிளோவர் (0), பால் வான் மீகேரன் (0) வெளியேறினர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634919316/ICCT20WorldCup2021T20CricketSriLankaNetherland.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634919316/ICCT20WorldCup2021T20CricketSriLankaNetherland.html