இந்தியாவுக்கு வெற்றி உறுதி: ஹர்பஜன் நம்பிக்கை | அக்டோபர் 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தானுக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும்,’’ என, ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எமிரேட்ஸ், ஓமனில் ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை வரும் அக். 17ல் துவங்குகிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக். 24ல் துபாயில் சந்திக்கிறது. உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தில்லை. ‘டி–20’ உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 5 போட்டியிலும் (2007ல் 2, 2012, 2014, 2016) இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே இம்முறையும் இந்தியாவின் வெற்றி நடை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634319136/ICCT20WorldCupCricketIndiaPakistanHarbhajanSingh.html