உலக சாம்பியனுக்கு ‘ஜாக்பாட்’: ரூ. 12 கோடி பரிசு | அக்டோபர் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 12 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என, ஐ.சி.சி., தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் எமிரேட்ஸ், ஓமனில் ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் வரும் அக். 17 முதல் நவ. 14 வரை நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான பரிசுத் தொகையை ஐ.சி.சி., அறிவித்துள்ளது. இதன்படி மொத்த பரிசுத் தொகை ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 12 கோடி வழங்கப்படும்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633882716/ICCT20WorldCup2021ChampionPrizeMoney.html