அசத்தும் அனுராதா: விஞ்ஞானி டூ ஜெர்மனி கேப்டன் | அக்டோபர் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஜெர்மனி பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டனாக அசத்துகிறார் அனுராதா. பெங்களூருவின் பசவங்குடியை சேர்ந்தவர் அனுராதா தோதாபல்லபுர் 34. வேகப்பந்து வீச்சாளரான இவர், கர்நாடக அணிக்காக 19 வயது அணியில் விளையாடியுள்ளார். 2008ல் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் பெரியளவு வளர்ச்சி இல்லாமல் இருந்தது. இதனால் மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக இங்கிலாந்து கவுன்டி அணியில் விளையாடினார். பிஎச்டி படிப்புக்காக 2011ல் ஜெர்மனி சென்றார். இங்குள்ள மேக்ஸ் பிளான்க் மையத்தில் தற்போது இருதய, நுரையீரல் பிரிவில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633885970/AnuradhaDoddaballapurGermanyWomenCricketCardiovascularScientist.html